உத்திரமேரூர் அருகே வாகன சோதனையில் ரூ.10½ லட்சம் சிக்கியது

உத்திரமேரூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் போது கணக்கில் வராத ரூ.10 லட்சத்து 40 ஆயிரம், 9½ பவுன் நகை பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.
உத்திரமேரூர் அருகே வாகன சோதனையில் ரூ.10½ லட்சம் சிக்கியது
Published on

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உத்திரமேரூர் அடுத்த மானாமதி கூட்ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வந்தவாசியில் இருந்து பெருநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரப்அலி (வயது 46) என்பவரது காரை சோதனையிட்டதில் முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சத்து 40 ஆயிரம், 9 பவுன் நகை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com