

வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி சேது சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது57). உப்பள தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை உப்பளத்திற்கு செல்வதற்காக மணியன் தீவு பலராமன் என்பவர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமர்பாதம் அருகே உப்பள பகுதிக்கு வலது புறம் திரும்பும் போது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேனை ஓட்டி வந்த கோடியக்காட்டை சேர்ந்த சதீசை வலைவீசி தேடி வருகின்றனர்.