விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய 2 பேர் கைது

விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய 2 பேர் கைது
Published on

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் போஸ். சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த கிராமத்தின் வடக்கு தெருவில் பணி நடந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன்கள் கருங்கதுரை, செந்தில்குமார் ஆகிய இருவரும், தங்கள் இடத்தில் மண்ணை ஒதுக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த பஞ்சாயத்து தலைவர் போசை, கருங்கதுரை அவதூறாக பேசியது மட்டுமின்றி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த போஸ், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த போஸ் மகன் கார்த்திக்ராஜ், கருங்கதுரை தம்பி செந்தில்குமாரிடம் தட்டிக்கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செந்தில்குமார், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்து தலைவரை தாக்கியதாக கருங்கதுரையை கைது செய்தனர். அதே போன்று செந்தில்குமாரை தாக்கியதாக கார்த்திக்ராஜையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com