ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் வரவேற்றார். கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
Published on

கடலூர்,

சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட சங்க கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

கூட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அனந்ததுரை, தலைமை செயலக ஓட்டுனர் சங்க தலைவர் ராஜாராம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகி ராஜசேகர், திருப்பூர் மாவட்ட தலைவர் உசேன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் உதயகுமார், விழுப்புரம் மாவட்ட தலைவர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் கடந்த 6-வது ஊதியக்குழுவில் சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊர்தி ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள தர ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு சுகாதாரத்துறை அரசு பணிமனை அமைக்க வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் தங்கராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com