‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருக்கோவிலூர்,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருக்கோவிலூர் நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிழக்கு வீதியில் உள்ள முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன் வீடு அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் வி.நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் ராமு, வெங்கடேசன், பொறியாளர் அணி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அரகண்டநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதை முறைப்படுத்த வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான வக்கீல் ராயல்.எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள் கே.கார்த்திகேயன், என்.ஜி.அய்யப்பன், துணை அமைப்பாளர்கள் மணிவண்ணன், பொன்முருகன், அன்பழகன், மாணவர் அணி துணை அமைப்பாளர் பார்த்தீபன் செல்வபதி, வீரசோழபுரம் கிளை நிர்வாகி பார்த்தீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பினை முறைப்படுத்தக்கோரியும் தியாகதுருகம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மடம்.பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணி, நிர்வாகிகள் அண்ணா, ஏழுமலை, அப்போலியன், உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திம்மலை, மேல்வழி, பொரசக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com