நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது கலெக்டர் பாராட்டு.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிக செயலாளரும், தனியார் மருந்து வணிக ஏஜென்சியின் உரிமையாளருமான சரவணன்- நித்யா தம்பதிகளின் மகன் நவீன் விக்னேஷ். இவர் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். சைனிக் பள்ளிமாணவர் நவீன் விக்னேஷ். இந்தியாவிலிருந்து இளம் விஞ்ஞானிகளுக்கான இன்டர்நேஷனல் ஸ்பேஸ் சயின்ஸ் கான்பரன்சிங் போட்டியில் பங்கேற்று கடந்த 5-ந் தேதி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றார். இப்போட்டியில் கலந்துகொண்ட நவீன் விக்னேஷ் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்று நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட மொத்தம் 65 மாணவர்களில் 6-வது இடத்தை பிடித்து "நீல் ஆம்ஸ்ட்ராங்" என்ற விருதை வென்று பெரம்பலூர் திரும்பி உள்ளார். இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சாந்தா மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அதிகாரி அருள்அரங்கன் ஆகியோர் நவீன்விக்னேசுக்கு பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com