கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், திரும்பியவர்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், திரும்பியவர்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், திரும்பியவர்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், மேலும் வெளியூர் சென்று திரும்பியவர்கள் விவரத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்தோ, வெளி மாவட்டத்திலிருந்தோ, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் அத்தியாவசியமான மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக இந்த மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தை பொதுமக்கள் உடனடியாக 04343 - 230044, 04343- 234444 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது வந்தவர்கள் அவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறும், அவரவர் வீடுகளிலேயே 28 நாட்கள் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது புதிதாக மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தினை பொதுமக்கள் உடனடியாக மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த அலுவலர்களும், பிரதிநிதிகளும் இப்பணியை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் உங்களது முழு ஒத்துழைப்பினை நல்கி வெளிமாநிலத்திற்கோ மற்றும் வெளி மாவட்டத்திற்கோ சென்று வந்தவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே இருந்து தனிமை ப்படுத்தி கொண்டு கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com