ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மணலூர்பேட்டை தென்பெண்ணையாறு பாலம்

ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்று பாலத்தை காமராஜ் எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மணலூர்பேட்டை தென்பெண்ணையாறு பாலம்
Published on

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.20 கோடி செலவில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 75 சதவீத பணிகள் முடிவடைந்து, மீதமுள்ள பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. காமராஜ், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுரு ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் பாலத்தை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் கட்டி முடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து காமராஜ் எம்.பி, குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் பணிகள் முடிந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பாலம் திறக்கப்பட்டால் திருவண்ணாமலையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் பயண நேரம் குறையும். மேலும் திருவண்ணாமலையில் இருந்து திருச்சி மற்றும் தஞ்சாவூர் சாலையை இணைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட சாலை அமைக்க முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றனர்.

அப்போது முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி, மணலூர்பேட்டை நகர செயலாளர் தங்கவேல், மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிசாமி, திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மாரங்கியூர் இளங்கோவன், நகர இளைஞரணி செயலாளர் தங்க.பிரகாஷ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com