திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ. விசாரணை

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 23). இவருக்கு வளசரவாக்கத்தை சேர்ந்த விஸ்வநாத் (27) என்பவருடன் கடந்த 1-ந் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

இந்த நிலையில் அரும்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த திவ்யபாரதி மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்ற திவ்யபாரதி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேலே சென்று கதவை தட்டியும் திறக்காததால் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, திவ்யபாரதி தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணமான 1 மாதமே ஆன நிலையில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் நன்மங்கலம் இந்திரா நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆஷா கிறிஸ்டி (20). இவர் சோழிங்கநல்லூரில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தநிலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், தந்தை சில மாதங்களுக்கு முன்இறந்த சோகத்தில் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com