லோக் ஆயுக்தா அமைப்பதில் கவனம் இல்லை: ஆட்சியை தக்கவைக்கவும், பணம் சம்பாதிப்பதிலும் அ.தி.மு.க. அரசு ஆர்வம்

லோக் ஆயுக்தா அமைப்பதில் கவனம் இல்லை என்றும், ஆட்சியை தக்கவைக்கவும், பணம் சம்பாதிப்பதிலும் அ.தி.மு.க. அரசு ஆர்வம் காட்டிவருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
லோக் ஆயுக்தா அமைப்பதில் கவனம் இல்லை: ஆட்சியை தக்கவைக்கவும், பணம் சம்பாதிப்பதிலும் அ.தி.மு.க. அரசு ஆர்வம்
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்து, மத்திய மாநில அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சேலம் வந்த கனிமொழி எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனையடுத்து நேற்று சென்னை செல்ல காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த தி.மு.க எம்பி கனிமொழி, முன்னதாக குப்பூர் கிராமத்திற்கு சென்று மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகளை சந்தித்தார். அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலம் காலமாக இந்த பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும், தங்களுக்கு இதனை விட்டால் வேறு தொழில் தெரியாது எனவும் செல்வசெழிப்பாக இருக்கும் அந்த இடத்தினை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கொடுக்கமாட்டோம் என்றும், விளைநிலங்களை விரிவாக்கத்திற்கு எடுப்பதை தடுத்து நிறுத்தும்படி கேட்டுகொண்டனர்.

கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, விமான நிலைய விரிவாக்கப்பணி கைவிடப்பட்டது. மறுபடியும் விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க அரசு நினைக்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும். நிச்சயமாக தி.மு.க. உங்களுடன் இருக்கும். உங்கள் கோரிக்கையினை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று, உங்கள் உணர்வுகளை எடுத்து கூறுவேன்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்காததற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு நாளும் பணம் சம்பாதிப்பதிலும், ஆட்சியினை தக்கவைத்து கொள்வதிலும்தான் ஆர்வம் காட்டுகிறது. வேறு எதிலும் கவனம் செல்வதில்லை.

அப்போது சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மத்திய மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன், குப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com