மும்பை ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

குழந்தைகள் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி அளித்து உள்ளா.
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
Published on

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது

பண்டாராவில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது:- இது இதயத்தை நொறுக்கும், மூளையை உணர்விழக்க செய்யும் சம்பவம் ஆகும். சம்பவம் குறித்து உயர் மட்ட அளவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. நாக்பூர் தீ பொறியியல் கல்லூரி வல்லுநர்கள் மற்றும் மாநில மின்துறை அதிகாரிகள் தீ விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. அப்போது தீ விபத்து தடுப்பு தணிக்கை நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். தீயணைப்பு துறையினர், ஆஸ்பத்திரியில் இருந்த மருத்துவ பணியாளர்கள் தீ மேலும் பரவுவதை தடுத்து, 7 குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com