மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - திருநாவுக்கரசர்

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று திருநாவுக்கரசர் பேசினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - திருநாவுக்கரசர்
Published on

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சேத்துப்பட்டில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை தலைமை தாங்கினார். காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய ஊடக செய்தி தொடர்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.தசரதன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவித்தபோது 62 மாவட்டங்கள் இருந்தது. தற்போது 72 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் ஆகியவை 38 மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தபிறகு 7 மாதங்களில் 1,500 போராட்டங்கள் நடந்துள்ளதாக அவர் கூறுகிறார். இதற்கு ஆளுமை இல்லாததே காரணம். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரசை ஆதரிக்கும் கட்சிகளுடன் இணைந்து மத்தியில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம். மாநிலத்தில் காங்கிரசை ஆதரிக்கும் கட்சியுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, மாநில சிறப்பு அழைப்பாளர் கருணாமூர்த்தி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜாராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், ஜெயசீலன், அப்துல்கலீம், மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பழகன், பன்னீர்செல்வம், வட்டார தலைவர் அன்புதாஸ், விஜயகாந்த், ராஜேந்திரன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஜெயசீலி, பெரணமல்லூர் நகர தலைவர் பழக்கடை பாலையா, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொகுதி அமைப்பாளர் கலைமணி நன்றி கூறினார்.

முன்னதாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சாமி தரிசனம் செய்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர் நெடுஞ்சாலைத்துறையில் முதல்-அமைச்சர், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மீது ஊழல் வழக்குப்பதிய வேண்டும். இதற்கு முதல்-அமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com