

திண்டிவனம்,
சென்னை வளசரவாக்கத் தைச்சேர்ந்த பிரபு(வயது34), ஜானகி ராமன்(வயது 35) ஆகியோர் சென்னை ஓ.எம்.ஆர். சாலை கந்தன்சாவடியில் தனித்தனியாக செல்போன் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இவர்களை ஒரு கும்பல் அணுகி, வீடு கட்ட கடைக்கால் தோண்டியபோது புதையலாக கிடைத்த தங்க காசுகள் எங்களிடம் உள்ளது, அதனை குறைத்த விலைக்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
பின்னர் அந்த தங்ககாசுகளில் சிலவற்றை காண்பித்தனர். அதனை பார்த்து ஆசைப்பட்ட பிரபு விடமும், ஜானகி ராமனிடமும் ஆசைவார்த்தை கூறி, தங்களிடம் 2 கிலோவுக்கு மேல் தங்க காசு உள்ளதாக சொல்லி 40 லட்சம் ரூபாய் தந்தால் தங்க காசுகள் அடங்கிய சொம்பு குடுவையை தருவதாக கூறினார்கள்.
அதன்பேரில் தங்ககாசு களை வாங்குவதற்காக ஜானகி ராமனும், பிரபுவும் 40 லட்சம் ரூபாயுடன் மயிலத்துக்கு வந்தனர். அவர்களிடம் அந்த கும்பல் தங்க காசுகள் நிறைந்த சொம்பு குடுவையை காட்டி ஏமாற்றி 40 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு பணத்தை எண்ணி சரிபார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு காரில் போலீஸ் போல வேடமிட்டு வந்த ஒருகும்பல் ஜானகிராமன், பிரபுவிடம் என்ன இங்கு கஞ்சா விற்கிறீர்களா? என மிரட்டி தங்ககாசு குடுவை மற்றும் ரூ.40 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தங்ககாசு விற்றவர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு தலைமறை வாகினார்கள்.
இந்த மோசடி சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோசடிகும்பலை சேர்ந்த செந்தில் என்ற சுரேஷ், ரகுராமன் ஆகியோரை கடந்த 2-ந்தேதி போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து ரூ.31 ஆயிரம் மற்றும் கார் ஆகியவை கைப்பற்றப் பட்டது.
இதன்பிறகு இந்த மோசடி கும்பலின் தலைவனான கண்டமங்கலம் அம்மணங் குப்பத்தைச்சேர்ந்த தர்மலிங் கம்(64) என்பவரை கைது செய்து 2 லட்சத்து 22 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று அவரது தம்பி ராமகிருஷ்ணன்(60) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த குண சேகரன் என்பவரது மகன் அருள்முருகன்(35), அவரது தம்பி மணிகண்டன்(33) ஆகியோரை கைது செய்து, ரூ.22 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அம்மணங் குப்பத்தைச்சேர்ந்த இந்த மோசடி கும்பல் மீது புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத் தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இந்த கும்பலிடம் இருந்து இதுவரை 2 கார்கள் மற்றும் 25 லட்சத்து 51 ஆயிரம் பணம் கைப்பற்றப் பட்டு உள்ளது.
இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனத்தில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர், மோசடி கும்பலை கைது செய்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையிலான தனிப் படையைச்சேர்ந்த இன்ஸ் பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ் பெக்டர்கள் சசிக்குமார், ரங்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் பாண்டியன் மற்றும் ஏட்டுகள் அய்யப்பன், சிவகுமார், மணிமாறன், செந்தில் சுந்தரமூர்த்தி, பூபாலன், ராஜ செல்வம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மேலும் இந்த வழக்கில் போலீஸ் போல் வேடமிட்டு காரில் வந்த 5 நபர்கள் வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த வர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.