

திண்டுக்கல்,
தமிழ்நாடு போலீஸ் துறையில் இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆகிய பணியிடங் களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற் காக விண்ணப்பித்த இளைஞர்களில் தகுதியான நபர் களுக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நடக்கிறது.
இதையொட்டி மாவட்டம் வாரியாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எம்.என்ஜினீயரிங் கல்லூரி, எஸ்.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி, எஸ்.எஸ்.எம். சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எஸ்.என்.ஏ.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் சக்தி மகளிர் கல்லூரி என மொத்தம் 5 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக் கின்றன.
இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 6 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக தேர்வு மையங்களில் குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மைய வளாகத்தில் விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் தேர்வு மையத்துக் குள் விண்ணப்பதாரர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார் கள். இதனால் காலை 8 மணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை 10.15 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது.
அதேபோல் பேனா, ஹால்டிக்கெட் ஆகியவற்றை மட்டுமே தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல வேண்டும். செல்போன், கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்வதற்கு தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.