அ.தி.மு.க.வின் தொலைநோக்கு திட்டங்கள் மூலம் பழனி வளம் பெறும் வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி

அ.தி.மு.க.வின் தொலை நோக்கு திட்டங்களால் பழனி முழுமையான வளம் பெறும் என்று வேட்பாளர் ரவிமனோ கரன் உறுதி அளித்தார்.
அ.தி.மு.க.வின் தொலைநோக்கு திட்டங்கள் மூலம் பழனி வளம் பெறும் வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி
Published on

பழனி,

பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ரவிமனோ கரன் நேற்று பழனி வையா புரிக்குளம் கரைப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மதனபுரம், காந்திமார்க்கெட், கடைவீதி, அம்பேத்கர்நகர், அருள்ஜோதி வீதி, பாளையம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். பின்னர் அவர் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனை வரையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பழனி நகரின் குடிநீருக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கும் ஆதாரமாக உள்ள வையாபுரிக்குளம் மாசடைந்து காணப்படுகிறது. இதில் கழிவுநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப் பேன். மேலும் குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைத்து பொதுமக்கள் காலை, மாலை வேளையில் அதில் நடைபயணம் செல்ல ஏற்பாடு செய்வேன்.

ஆன்மிக நகராக உள்ள பழனிக்கு வரும் பக்தர்கள் சுற்றி பார்க்க போதிய பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால் வையாபுரிக்குள கரைப் பகுதியில் பூங்கா அமைத்து கொடுப்பேன். மேலும் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கான பல்வேறு தொலைநோக்கு திட்டங் களை வைத்துள்ளார். இதன் மூலம் பழனி முழு வளம் பெற்று திகழும். அதோடு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட தொகுதியாக பழனி இருக்கும்.

மக்களுக்கான திட்டங்கள் தற்போது ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதா சொன்ன அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்றி வரு கிறது. குறிப்பாக ஏழை பெண்களுக்கு திருமண உதவியாக தாலிக்கு தங்கம், கர்ப்பிணிகளுக்கு சத்துப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு, இலவச மின்சாரம் என பலவற்றை நிறைவேற்றி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மக்களின் மனதை கவர்ந்த முதல்வராக திகழ்கிறார். இந்நிலையில் தற்போது அ.தி.மு.க. விடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தும் மக்களின் நலனுக்கானவை மட்டுமே. குறிப்பாக மக்கள் எரிபொருள் விலையேற்றத்தால் தவித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாத உதவி, இலவச வாஷிங்மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடு என ஏழைகளுக்கான திட்டங்களாக உள்ளன. இவை அனைத்தும் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞரணி செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com