விளையாட்டு வீரர்களுக்கு கடற்படையில் அதிகாரி பணி

கடற்படையில் ‘பெட்டி ஆபீசர்’ அதிகாரி பணிக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு படிப்புடன், விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு கடற்படையில் அதிகாரி பணி
Published on

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெட்டி ஆபீசர் தரத்திலான அதிகாரி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்கும் செய்லர் (ஸ்போர்ட்ஸ் கோட்டா) 2-2018 என்ட்ரி எனும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 17 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-8-1996 மற்றும் 31-7-2001 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர். மற்றும் எம்.ஆர். பணியிடங்களுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் 1-8-1997மற்றும் 31-7-2001 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

எம்.ஆர். பிரிவு பணியில் சேர 10-ம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.ஆர். மற்றும் பெட்டி ஆபீசர் என்ட்ரி பணியில் சேர பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தடகளம், நீர்விளையாட்டுகள், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, கபடி, ஹேண்ட்பால், பளுதூக்குதல், மல்யுத்தம், ஸ்குவாஸ், வாள்சண்டை, கோல்ப், டென்னிஸ், காய கிங், கனோயின், ரோயிங், சூட்டிங், செயிலிங், விண்ட் சர்பிக், ஹார்ஸ்போலோ போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் சர்வதேச அளவில் அல்லது தேசிய அளவில் சாதித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, விளையாட்டுத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

உடற்தகுதி :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

குறிப்பிட்ட மாதிரியான வடிவில் ஏ4 காகிதத்தில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள், புகைப்படங்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் பயிற்சியின் பெயர், மதிப்பெண் சதவீதம் போன்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 9-7-2018-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com