அதிகாரிகள் அதிரடி சோதனை: அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கிய மினிபஸ் பறிமுதல்

கருங்கல் பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. டிக்கெட் அடிப்படையில் பயணிகளை ஏற்றி வந்த சுற்றுலா வேனும் சிக்கியது.
அதிகாரிகள் அதிரடி சோதனை: அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கிய மினிபஸ் பறிமுதல்
Published on

நாகர்கோவில்,

கருங்கல் பகுதியில் மினி பஸ்கள் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில், பிரேக் இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் அதிகாரிகள், கருங்கல் பகுதியில் திடீர் ரோந்து பணியை மேற்கொண்டனர். அவர்கள் கருங்கல் பஸ்நிலையம் அருகே வந்த போது அவ்வழியே வந்த மினிபஸ் ஒன்றை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், ஜேம்ஸ் ஆஸ்பத்திரி முதல் மிடாலக்காடு வரையே இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த அந்த மினிபஸ் கருங்கலில் இருந்து குளச்சலுக்கு நேர்வழியில் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து மினிபஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுபோல் கைச்சூண்டி பகுதியில், புதுக்கடைகருங்கல் இடையே பயணிகளை டிக்கெட் அடிப்படையில் ஏற்றி வந்த சுற்றுலா வேன் ஒன்றும் அதிகாரிகளிடம் சிக்கியது. உடனே அதிகாரிகள் அந்த சுற்றுலா வேனையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com