

மும்பை,
அசோக் மஸ்த்கருக்கு சுன்னாப்பட்டியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அறிமுகமாகியிருந்தார். அவர் பண நெருக்கடியால் தவித்து வந்துள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று அந்த பெண்ணுக்கு பணம் தருவதாக கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அந்த பெண்ணும் அவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது முதியவர் அசோக் மஸ்த்கர் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி அவர் தாதர் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.