வேதாரண்யம் அருகே கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கியது.
வேதாரண்யம் அருகே கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் வரை கடற்கரை பகுதி உள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் மழைகாலங்களில் தங்கள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரை பகுதிக்கு வரும்.

கடற்கரை பகுதியில் உள்ள மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 15 முதல் 25 முட்டைகள் வரையில் இட்டு அந்த குழியை மணலால் மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும்.

முட்டைகள்

சில சமயங்களில் சமூக விரோதிகள் இந்த ஆமை முட்டைகளை திருடிச் சென்று விடுவார்கள். இதில் மருத்துவ பலன்கள் அதிகமாக இருக்கிறது எனக்கூறி அதிக விலைக்கு அந்த முட்டைகளை விற்று விடுவார்கள்.

மணல் பரப்பில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிட்டுள்ள தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த முட்டைகளை கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் உள்ள ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் சேகரித்து கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்து விடுவார்கள். அந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளி வந்தவுடன் 15 நாட்களுக்கு குறையாமல் அந்த பொறிப்பகத்தில் வைத்து வளர்த்து கடலில் விட்டு விடுவார்கள்.

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இந்த நிலையில் புஷ்பவனம் கடற்கரையில் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. ஆமைகள் கடலில் இருந்து வரும்போது இயற்கை சீற்றம் மற்றும் கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு கரை ஒதுங்குவது வழக்கம்.

நேற்று புஷ்பவனம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கிய தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் சதீஷ் குமார் தலைமையில் வனத்துறையினர் கால்நடை மருத்துவருடன் சென்று இறந்து கிடந்த ஆலிவர் ரெட்லி ஆமையை உடற்கூராய்வு செய்து அங்கேயே புதைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com