பா.ஜனதா சார்பில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியா? முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத் பதில்

சாம்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியா? என்பது குறித்து முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத் பதில் அளித்துள்ளார்.
பா.ஜனதா சார்பில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியா? முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத் பதில்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மாநில தலைவர் எடியூரப்பா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சாம்ராஜ்நகர்(தனி) தொகுதியில் முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத்தை நிறுத்த எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவருடன் எடியூரப்பா பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இதனால் சாம்ராஜ் நகரில் சீனிவாச பிரசாத் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாம்ராஜ்நகர் தொகுதி யில் போட்டியிடும்படி என்னிடம் எடியூரப்பா கூறியுள்ளார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். மாநில தலைவர் எடியூரப்பா, தான் சாம்ராஜ்நகர் தாகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட இதுவரை 17 பேர் பா.ஜனதா தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் நான் போட்டியிட ஒரு மனதாக விரும்ப வேண்டும்.

அந்த 17 பேரும் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்குவதுடன், எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது எல்லாம் நடந்தால் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட சம்மதிப்பேன். அதே நேரத்தில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து எனது ஆதரவாளாகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பேன். இவ்வாறு சீனிவாச பிரசாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com