பா.ஜனதா சார்பில் கோவில்களை திறக்க கோரி மணி அடிக்கும் போராட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது

கோவில்களை திறக்கக்கோரி பா.ஜனதாவினர் பல்வேறு மாவட்டங்களில் மணி அடிக்கும் போராட்டம் நடத்தினர்.
பா.ஜனதா சார்பில் கோவில்களை திறக்க கோரி மணி அடிக்கும் போராட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் மும்பை மற்றும் தானே, பால்கர், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களை திறக்க கோரி பாரதீய ஜனதா கட்சியினர் மணி அடிக்கும் போராட்டம் நடத்தினர்.

மும்பையில் சயான் கோலிவாடா, வடலா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.

தானே, பால்கரில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், கோவில்கள் முன்பு மணி அடித்தும், தட்டுகளை தட்டி சத்தம் எழுப்பிய படியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புனே நகரில் உள்ள சரஸ்பாக் பகுதியில் மேயர் முரளிதர் மோகல் மற்றும் பலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தவிர ஆங்காங்கே கட்சி பிரமுகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பாத மாநில பொது போக்குவரத்தை முழுமையாக இயக்கவும், மால்களை திறக்கவும் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com