சமுதாய தலைவர்கள் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு: கயத்தாறில் போலீஸ் நிலையம் முற்றுகை; வாலிபர் கைது

கயத்தாறு அருகே சமுதாய தலைவர்கள் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கயத்தாறு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சமுதாய தலைவர்கள் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு: கயத்தாறில் போலீஸ் நிலையம் முற்றுகை; வாலிபர் கைது
Published on

கயத்தாறு,

கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 20). இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் பிற சமுதாய தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கயத்தாறு போலீஸ் நிலையத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், போலீஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன் (கயத்தாறு), விநாயகம் (கோவில்பட்டி மேற்கு), முத்துலட்சுமி (கழுகுமலை) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சாதி மோதலை தூண்டுதல், பிற சமுதாயத்தினரின் மனதை புண்படும்படியாக பேசுதல், வதந்திகளை பரப்புதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com