மைசூருவில் 28-ந்தேதி நடக்கிறது தசரா விழா உயர்மட்ட குழு கூட்டம்

மைசூரு தசரா விழா தொடர்பாக மைசூருவில் வருகிற 28-ந்தேதி உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா தெரிவித்தார்.
மைசூருவில் 28-ந்தேதி நடக்கிறது தசரா விழா உயர்மட்ட குழு கூட்டம்
Published on

மைசூரு,

கர்நாடக உயர் கல்வித்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்து தந்திரம் செய்து கொண்டிருக்கிறார். மைசூரு மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது. இதில் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்க சித்தராமையா முயற்சி செய்து கொண்டிருக் கிறார்.

சித்தராமையா தனது வீட்டில் காங்கிரஸ் தொண்டர்கள், வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியவர்களை தோற்கடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நஞ்சன்கூடு சுத்தூரில் வருகிற 28-ந்தேதி சிவராத்திரி ராஜேந்திர சுவாமியின் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி குமாரசாமி அன்றைய தினம் மைசூருவுக்கு வருகிறார். அன்றைய தினம் (28-ந்தேதி) மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் குமாரசாமி தலைமையில் தசரா விழா உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து கொண்டு, மைசூரு தசரா விழாவை ஆடம்பரமாக நடத்துவதா? அல்லது சாதாரணமாக நடத்துவதா? என்பது குறித்து குமாரசாமி முடிவு செய்வார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com