4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29-ந் தேதியில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய பிப்ரவரி மாதம் 29-ந் தேதியில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29-ந் தேதியில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன
Published on

திருப்பூர்,
ஆங்கில மாதத்தில் பிப்ரவரியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்கள் வரும். இதனால் பிப்ரவரி மாதம் 29-ந் தேதி ஒரு அரிய நாளாக கருதப்படுகிறது.

இது ஆங்கிலத்தில் லீப் ஆண்டு என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட முடியும்.

மேலும் இந்த நாளில் நடக்கும் விசேஷங்கள், மற்ற நிகழ்ச்சிகளும் அதை நினைவு கூர்ந்து கொண்டாட அடுத்து 4 ஆண்டுகள் ஆகும்.

இதனால் பிப்ரவரி மாதம் 29-ந் தேதி வரலாற்றில் முக்கிய நாளாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பிப்ரவரி மாதம் 29-ந் தேதி இந்த ஆண்டு(2020) நேற்று அமைந்தது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மகப்பேறு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 கர்ப்பிணிகளுக்கு நேற்று பிரசவமானது.

மகப்பேறு மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். அதன்படி நேற்று ஒரே நாளில் மொத்தம் 10 குழந்தைகள் பிறந்தன.

இதில் 8 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் ஆகும். 5 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடந்தது. 5 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவமானது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமாக உள்ளனர். நேற்று பிறந்த இந்த 10 குழந்தைகளும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தங்கள் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com