

சேலம்,
கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் மது குடித்துவிட்டு பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி வருகின்றனர். எங்கள் கிராமத்திற்குள் வந்து சென்ற தனியார் பஸ்சின் டிரைவர், கண்டக்டரை அவர்கள் தரக்குறைவாக பேசியதால் கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் ஊருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.