சினிமா இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை பாயல் கோஷ் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார்

இந்தி நடிகை பாயல் கோஷ் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார்.
சினிமா இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை பாயல் கோஷ் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார்
Published on

மும்பை,

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது சமீபத்தில் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்தி நடிகை பாயல் கோஷ். நடிகையின் புகார் குறித்து மும்பை போலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

முன்னதாக நடிகை பாயல் கோசுக்கு இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே ஆதரவு தெரிவித்து இருந்தார். மேலும் அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று அவருக்கு நீதி கிடைக்க கர்வனர் பகத்சிங் கோஷ்யாரிடம் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த விழாவில் நடிகை பாயல் கோஷ், ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார். பின்னர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், கட்சியில் இணைந்ததற்காக பாயல் கோசுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் அவரை வரவேற்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com