நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது

நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறி வைத்து, தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது
Published on

போத்தனூர்,

கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திராவில் இருந்து கோவை வழியாக பாலக்காடு சென்ற லாரி வேலந்தாவளம் அருகே வந்தபோது சிறைபிடித்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றது. அப்போது தப்பி ஓட முயன்ற அந்த கும்பலை சேர்ந்த அனஸ்பாபு (வயது 29) என்பவரை ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் கொள்ளைக்கு கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹக்கீம் (32) என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் தனிப்படையினர் கேரளா விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஹக்கீமை கைது செய்த போலீசார் கோவை கொண்டு வந்து மதுக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட ஹக்கீம் நெடுஞ்சாலைகளில் குட்கா பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளை மட்டும் குறி வைத்து இவரது தலைமையிலான கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது.

குட்கா பொருட்களை கொள்ளையடிக்கும் போது போலீஸ் நிலையத்திற்கு புகார் வராது என்பதால், இதில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். மேலும் நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கும் குட்காவை வேறு பகுதிக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வந்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரூரில் அரிசி லோடு ஏற்றி சென்ற லாரியை சிறை பிடித்து டிரைவரை தாக்கி விட்டு 90 டன் அரிசியுடன் லாரியை கடத்தி சென்று உள்ளனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பல். கடந்த 18-ந் தேதி, வேலந்தாவளம் பகுதியில் வந்த லாரியை குட்கா லாரி என எண்ணி கொள்ளையடிக்க முயன்று உள்ளனர்.

அதில் மீன் குஞ்சுகள் எடுத்து சென்றதால் டிரைவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com