

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கடம்பத்தூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. கடந்த 3 நாட்களாக கழிவுநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரை அப்புறப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.