

பொங்கலூர்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர்- தாராபுரம் சாலையில் வேலம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் கணக்கில் வராத ரூ. 1லட்சம் வைத்திருந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தாராபுரத்தை சேர்ந்த உர வியாபாரி சுப்பிரமணி என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
---------------------