விநாயகர் சிலையை கரைக்க ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அறிவிப்பு

விநாயகர் சிலைகளை கரைக்க ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்தார்.
விநாயகர் சிலையை கரைக்க ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அறிவிப்பு
Published on

மதுரை,

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள், சங்கு, குத்துவிளக்கு போன்றவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம்.

அப்போது மதுரையில் கோவில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் பட்டியலில் இருந்த செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் தான் சிலைகளை திருடினார் என்பது தெரிய வந்தது.

கண்காணிப்பு கேமரா

மேலும் அவர் அந்த சிலைகளை அனுப்பானடி பகுதியை சேர்ந்த முகமதுமுஸ்தபா, செபாஸ்டின் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்து அந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா உதவியுடன் தான் நகை திருட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே நகரில் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கு பொதுமக்கள், அனைத்து தரப்பினரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட எந்த தடையும் இல்லை. சிலைகளை கரைக்க ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com