ராதாபுரம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் - கலெக்டரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை

ராதாபுரம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கலெக்டர் ஷில்பாவிடம், இன்பதுரை எம்.எல்.ஏ கோரிக்கை மனு கொடுத்தார்.
ராதாபுரம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் - கலெக்டரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது இன்பதுரை எம்.எல்.ஏ. கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் ராதாபுரம் மற்றும் திசையன்விளை பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இன்பதுரை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ராதாபுரம் மற்றும் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உப்பாக மாறியுள்ளது. இதனால் கடைமடை குளங்களான இளங்காடி, நயினார்குளம் மற்றும் ஆயக்கான் குளத்திற்கு மணிமுத்தாறு அணையின் 3-வது மற்றும் 4-வது ரீச்சுகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தற்போது கால அவகாசம் முடிந்தும் 1 மற்றும் 2-வது ரீச்சுகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. எனவே தண்ணீரை நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்ற னர். இதனால் அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராதாபுரம் மற்றும் திசையன்விளை பகுதி விவசாயிகள், பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்க உடனடியாக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com