இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி
Published on

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இதன் தெற்கு மண்டல கிளையின் விற்பனை பிரிவில் ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற இடங்களில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஹெவி லைசென்சு பெற்றவர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். 16-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு 30-7-2018-ந் தேதி நடக்க உள்ளது. இது பற்றிய விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com