குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

தேனி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க.வும் இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, இந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் இதற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com