காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: திருப்பூரில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: திருப்பூரில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பூர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக யூனிவர்செல் ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் ஹாஜா கனி தலைமை தங்கினார்.

மாநில செயலாளர் சாதிக் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் அஸ்லம் பாஷா, ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் வரவேற்று பேசினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தி.மு.க. திருப்பூர் மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், காங்கிரஸ் நிர்வாகி வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் கனியமுதன், டி.எஸ்.எஸ். மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், ரத்து செய்யப்பட்ட காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை உடனடியாக திரும்ப பெற வேண் டும். தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சிறப்பு அதிகாரத்தை வழங்கி அதன் மூலம் மக்கள் மீது அடக்கு முறைகளை ஏவி விட அரசு முயற்சித்து வருகிறது.

தொடர்ந்து மக்கள் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு தனது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த த.மு.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com