ஒரகடத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒரகடத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரகடத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக உள்ள சிங்கபெருமாள்கோவில் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் சாலை மற்றும் வண்டலூர்- வாலாஜாபாத் செல்லும் சாலை உள்ளது. இந்த 2 சாலைகள் செல்லும் சந்திப்பு பகுதியில் ஒரகடம் மேம்பாலம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை இந்த சாலை வழியாக செல்கிறது.

இந்த மேம்பால சந்திப்பின் கீழே வாலாஜாபாத் வழி செல்லும் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வண்டலூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில் என 4 பகுதிகளுக்கும் செல்லும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலை வழியாக ஒரகடம், எழிச்சூர், பண்ருட்டி, கண்டிகை, மாத்தூர் உள்ளிட்ட 20-ககும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் நடந்து செல்பவர்களும் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனும் உயிருக்கு பயந்து வாகனத்தை ஓட்டும் நிலையில் செல்கின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும், ஒரகடம் பகுதி உள்ளது. எனவே குன்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com