விவசாய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்து உள்ளது - துணை முதல்-மந்திரி பரமேஸ்வர்

விவசாய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்துள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
விவசாய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்து உள்ளது - துணை முதல்-மந்திரி பரமேஸ்வர்
Published on

பெங்களூரு,

துமகூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

சுதந்திரத்திற்காக நமது தலைவர்கள் பலர் வாழ்க்கையை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் நாம் இன்று சுதந்திர இந்தியாவில் உள்ளோம். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் போராட்டங்கள் மக்களிடையே தேசபக்தியை அதிகரித்தது. காந்தியின் அகிம்சை போராட்டத்தை இந்த உலகமே வியந்து பாராட்டியது.

சுதந்திரம் பெற ஒத்துழையாமை இயக்க போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை மகாத்மா காந்தி நடத்தினார். சுதந்திர போராட்டத்தில் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அதிகமாக உள்ளது. சுதந்திரம் கிடைத்த பிறகு நாடு அனைத்து துறையிலும் முன்னணியில் உள்ளது.

அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. துமகூரு வசந்தாபுரத்தில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை, சூரியசக்தி மின்உற்பத்தி பூங்கா, போலீஸ் அகாடமி ஆகியவை துமகூருவில் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com