மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க.வினர் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம்,

கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு முன்பு கருப்புக்கொடியுடன் இந்த போராட்டம் நடந்தது.

அந்த வகையில் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை பொன்.அண்ணாமலை நகரில் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளருமான சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அந்த கடைகளை மூட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

விழுப்புரம்- சிந்தாமணி

விக்கிரவாண்டி தொகுதி சிந்தாமணி பகுதியில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் கனல்காமராஜ், பசுமை தாயகம் அமைப்பின் மாவட்ட தலைவர் வேலு, மாவட்ட பொருளாளர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் குழந்தைவேல், சக்திவேல், கிளை செயலாளர்கள் தங்கராசு, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், அந்த கடைகளை உடனடியாக நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி தலைமை தாங்கினார். இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாநில இளைஞரணி செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம், வேலு நகர அமைப்பு செயலாளர் விஜயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மலர்சேகர், ராஜி மாநில சமூகநீதி பேரவை செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, இளங்கோ படையாட்சி முன்னாள் கவுன்சிலர்கள், வடபழனி, சரவணன், ராமன், ஜெயராஜ், ஏழுமலை, பூதேரி ரவி, சக்தி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேல்மலையனூர்

மேல்மலையனூரில் பா.ம.க. மாநில துணை அமைப்புச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, நகர துணைசெயலாளர் செல்வம், மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் ரமேஷ்குமார், நகர செயலாளர் பாலகிருஷ்ணன், உழவர் பேரியக்க செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் ரமேஷ், துணை தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

100 இடங்களில் நடந்தது

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தியபடி டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com