ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம்,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று முன்தினம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறியும் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், முபாரக்அலி, புருஷோத்தமன், சீனுவாசன், சரவணன், குமரேசன், பிரகாஷ், ரமணன், அன்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செஞ்சி கூட்டு சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தினகரன், மாவட்ட பொருளா ளர் கருணாகரன், வட்டார தலைவர்கள் செஞ்சி ஏ.ஜி. சரவணன், முருகன், கேபிள் ரமேஷ், மண்ணாங் கட்டி ஆகியோர் முன்னிலை வகித் தனர். நகர தலைவர் சரவணன் வரவேற்றார். ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர், ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் திண்டிவனம் நகர தலைவர் விநாயகம், நிர்வாகிகள் இல.கண்ணன், சுப்பையா, சக்திவேல், புனிதாமணி, முத்துலட்சுமி, மெடிக்கல் வெங்கட், ஒலக்கூர் கார்த்திக், பொன்பத்தி சீனுவாசன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கள்ளக்குறிச்சி யிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com