சேலத்தில் செல்போன் திருடிய பெயிண்டர் கைது

சேலத்தில் செல்போன் திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் செல்போன் திருடிய பெயிண்டர் கைது
Published on

பெயிண்டர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 29). பெயிண்டரான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். அவர் பெங்களூருவில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று காலை சின்னேரி வயக்காட்டில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அலுவலகத்துக்கு சென்றார்.

பின்னர் அவர் அங்கிருந்த நிர்வாகி ரெஜித்குமாரை சந்தித்து பேசினார். அப்போது, தான் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதாகவும், சேலம் புதிய பஸ் நிலையத்தில் தன்னுடைய பணம் திருட்டு போனதாகவும் கூறினார். மேலும் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல பணம் தந்து உதவும்படி ரெஜித்குமாரிடம் கேட்டார். இதை நம்பி அவரும் ரூ.500 கொடுத்தார்.

செல்போன் திருட்டு

செந்தில்குமார் சென்ற பின்னர் ரெஜித்குமாரின் செல்போன் காணவில்லை. பின்னர் செந்தில்குமார் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரெஜித்குமார் தனது நண்பர்கள் சிலருடன் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு செந்தில்குமார் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.பின்னர் அவர்கள் 2 பேரும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் ரெஜித்குமார் செல்போனை திருடியது செந்தில்குமார் என்பதும், அவருடன் நின்றது மாயமான மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com