திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை பிரயாம்பத்து பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 58). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு உணவு அருந்தி விட்டு மாடியில் உறங்கச் சென்றார்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
Published on

இந்த நிலையில் மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கிய போது, திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அவர் வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் மூர்த்தி பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com