2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்-அமைச்சராக வருவார் என்று மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் கூறினார்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்
Published on

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சின்னத்தம்பி எம்.எல்.ஏ., பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சின்னத்தம்பி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் தங்கமணி, மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வம் வரவேற்றார்.

இதையடுத்து சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் பேசியதாவது:-

மக்கள் நலத்திட்டங்கள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன் ஒன்றே முக்கியம் என கருதியதுடன், பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இரவு, பகல் பாராமல் உழைத்து நம்மை விட்டு மறைந்தார். அதன் பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் தனது இரு கண்களாகக் கொண்டு இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்.

தற்போது நடைபெற்ற புறநகர் உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களை அ.தி.மு.க. வென்றுள்ளது. அதற்கு காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் நலத்திட்டங்கள் தான்..

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி

நாடாளுமன்ற தேர்தலில் நகைக்கடன் தள்ளுபடி என பொய்யான வாக்குறுதி கொடுத்து தி.மு.க. வாக்குகளைப் பெற்றது. அதற்கு அடுத்தாற்போல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளோம். இதற்கு காரணம் உண்மையை தெளிவாக சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்ததுதான். வருகின்ற 2021-ம்ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிராஜூதீன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வேலாயுதம், நகர அவைத்தலைவர் ராஜி, நகர பொருளாளர் சக்திகோபால், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்பரசு, உமையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், உடையாப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் முருகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com