ஊராட்சிமன்ற துணைத்தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் மோதல் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
ஊராட்சிமன்ற துணைத்தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது40). இவர் நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் ஜெயஸ்ரீ பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் (56) அவரது உறவினரான ஜெயபால் (59), ஈஸ்வரன் (20) ஆகியோர் ஆண்டாள் என்பவருக்கு ஏன் முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை என கூறி தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பதிலுக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயஸ்ரீ, அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் முனிரத்தினம் தரப்பினரை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். பிரவீன்குமார் முனிரத்தினத்தை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக இரு தரப்பை சேர்ந்த முனிரத்தினம், ஜெயபால், ஈஸ்வரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயஸ்ரீ, அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com