பண்ருட்டி, காட்டுமன்னார்கோவிலில், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

பண்ருட்டி, காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பண்ருட்டி, காட்டுமன்னார்கோவிலில், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி
Published on

பண்ருட்டி,

பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி தலைமை தாங்கினார். சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நெல்லிக்குப்பம், ஒறையூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 1,403 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

இதில் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர்கள் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.வி. ஜூவல்லர்ஸ் வைரக்கண்ணு, பண்ருட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்திரசேகர், துணைத்தலைவர் காமராஜ், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அமலி நன்றி கூறினார்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு உட்பட்ட 14 பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு குருகுல இல்ல செயலாளர் கிருபானந்தன் தலைமை தாங்கினார்.

தலைமை ஆசிரியர்கள் ராஜ், பவானி, முருகன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருகுல பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 658 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். இதில் தலைமை ஆசிரியர்கள் இளங்கோவன், இளஞ்செழியன், கொளஞ்சி, மலர்செல்வன், திருமுருகன், பழனிவேல், காந்திதாசன், வடிவேல், அருள்பிரகாசம், காட்டுமன்னார்கோவில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ஜி.ஆர்.தாசன், கல்விக்குழு உறுப்பினர்கள் வாசு, முருகையன், சிவப்பிரகாசம், பாலச்சந்தர், வேல்முருகன், பள்ளி செயலாளர் ராஜாராமன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல்ராஜா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தர்மராஜன் நன்றி கூறினார்.

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் டாக்டர் செந்தில்வேலன், ரத்தின சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புவனகிரி எம்.எல்.ஏ. துரை. கி.சரவணன் கலந்து கொண்டு புவனகிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள், தர்மநல்லூர், மஞ்சக்கொல்லை, எரும்பூர் ஆகிய பள்ளிகளை சேர்ந்த 1,763 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், நகர செயலாளர் கந்தன், துணை செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் நெடுமாறன், வக்கீல் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி செல்லபாண்டியன், முன்னாள் இளைஞரணி செயலாளர் முத்து, துணை செயலாளர் எழில்வேந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாயவன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com