பரமக்குடி தொகுதி மக்களுக்காக என்னை அர்ப்பணித்து விட்டேன் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் உருக்கம்

முக்கியப் பிரமுகர்கள் என அனைவரையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி தொகுதி மக்களுக்காக என்னை அர்ப்பணித்து விட்டேன் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் உருக்கம்
Published on

ராமநாதபுரம்,

பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு .க. வேட்பாளர் சதன் பிரபாகர் பரமக்குடி தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமூக நல அமைப்புகள், சமுதாய தலைவர்கள். முக்கியப் பிரமுகர்கள் என அனைவரையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அனைத்து தரப்பு மக்களும் அவரை உற்சாகத்துடன் வரவேற்று பொன்னாடைகள் அணி வித்தும் மலர் மாலைகள் அணிவித்தும் கௌரவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் வேட்பாளர் சதன் பிரபாகர் பேசியதாவது:

அ.தி.மு.க. ஆட்சி என்றாலே தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி தான்.சமூக ஆர்வலர்கள், தன்னார் வலர்கள், பேராசிரியர்கள், படித்தவர்கள் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அனை வரும் தானாக முன்வந்து அ.தி.மு.க.வை ஆதரிக் கின்றனர். பரமக்குடி தொகுதி மக்களுக்காக என்னையே நான் அர்ப்பணித்து விட் டேன். கொரோனா காலத் திலும், புயல், மழை காலத் திலும் இரவு பகல் பாராது என் குடும்பத்தையும் பாராமல், எனது உயிரையும் பொருட்படுத்தாமல், இந்த தொகுதி மக்களுக்காக அயராது உழைத்துள்ளேன்.அதுவே தொடர்ந்து உங்களுக் காக உழைக்க, மக்கள் பணியாற்ற, இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்க ளித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். உங்களால் நான் உங்களுக்காகவே நான், என்ற அடிப்படையில் மக்கள் பணியாற்ற மீண்டும் என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் .இவ்வாறு பேசினார். இதில் கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் வாக்குகள் சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com