பரமக்குடி தொகுதி மக்களின் குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன் தி.மு.க. வேட்பாளர் முருகேசன் உறுதி

பரமக்குடி தொகுதி மக்களின் குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன் தி.மு.க. வேட்பாளர் முருகேசன் உறுதியளித்து வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி தொகுதி மக்களின் குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுவேன் தி.மு.க. வேட்பாளர் முருகேசன் உறுதி
Published on

ராமநாதபுரம்,

பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செ.முருகேசன்போகலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிதட்டி, மந்தி வலசை, மஞ்சக்கொல்லை, முதலூர், செவ்வூர், நாகாச்சி, காமன் கோட்டை, மஞ்சூர், சத்திரக்குடி உள்பட 42 கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருக்கு போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய தி.மு.க. பொருளாளர் குணசேகரன் ஆகியோர் வேட்பாளர் முருகேசனுக்கு வெற்றிவேல் பரிசாக வழங்கி ஆளுயர ரோஜாமாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும்,வெற்றி திலகமிட்டும், வரவேற்றனர். பின்பு வாக்காளர் மத்தியில் தி.மு.க. வேட்பாளர் செ.முருகேசன் பேசியதாவது: 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வால் மக் களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. குறிப்பாக கிராமப்புறங்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. தொழில் துறைகள் நசிந்து விட்டது. ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஏராளமான கிராமங்களில் பஸ் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர். இவைகளைப் போக்க, மக்களின் வாழ்வு மலர,வரும் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

அவருடன் தொகுதி பொறுப்பாளர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகரன், ஒன்றிய கழக பொறுப்பாளர் வக்கீல் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், அருளாந்து, மஞ்சூர் தங்கராஜ், பரமக்குடி நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சண்.சம்பத்குமார் ,நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாவட்ட அமைப்பாளர் செந்தில் செல்வானந்த் , முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் கார்த்திகைச் சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னாள், கனகராஜ்,கார்த்திக் பாண்டியன் ,சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிங்கராஜ் உள்பட ஏராளமானோர் வாக்குகள் சேகரித்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com