நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் எதுவுமே தெரியாமல் மும்பை போலீஸ் விசாரணையை விமர்சித்தார்கள் பரம்பீர் சிங் வேதனை

நடிகா சுஷாந்த் சிங் வழக்கில், எதுவுமே தெரியாமல் மும்பை போலீஸ் விசாரணையை விமர்சித்தார்கள் என கமிஷனர் பரம்பீர் சிங் வேதனை தெரிவித்து உள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் எதுவுமே தெரியாமல் மும்பை போலீஸ் விசாரணையை விமர்சித்தார்கள் பரம்பீர் சிங் வேதனை
Published on

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந்தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தினர். அவர்கள் சுஷாந்தின் காதலி ரியா மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சுஷாந்த் மரணம் தொடர்பாக பீகார் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதேபோல சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதாகவும் ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் சுஷாந்த் சிங்கின் உடல்திசு மாதிரிகளை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் அவர் கொலை செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

கமிஷனர் வேதனை

இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கூறியதாவது:-

எய்ம்ஸ் கண்டுபிடித்ததை நாங்கள் நிரூபித்து இருந்தோம். கோர்ட்டு நாங்கள் நடத்திய விசாரணையில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களது விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், உள்ள தகவல்கள் நீதிபதி உள்பட 6 பேருக்கு மட்டுமே தெரியும். ஆனால் இது எல்லாம் எதுவும் தெரியாமல் எங்கள் விசாரணை பற்றி விமர்சித்தார்கள்.

இவ்வாறு அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com