சென்னையில் போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் பெண்கள் பங்கேற்பு

தமிழக காவல்துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது.
சென்னையில் போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் பெண்கள் பங்கேற்பு
Published on

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்து வருகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை ஆண்களுக்கு மட்டும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

நேற்று பெண்கள் கலந்து கொண்ட ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நடந்தது. நேற்றைய தேர்வில் 370 பெண்கள் பங்கேற்றனர். அதில் கர்ப்பமாக இருந்த 5 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். குழந்தை பெற்று உடல் நலமான பிறகு,

தனியாக அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இன்றைய தேர்வில் திருநங்கை ஒருவரும் பங்கேற்க உள்ளார். ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com