பட்டிவீரன்பட்டி அருகே, கொரோனா பாதித்த பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

பட்டிவீரன்பட்டி அருகே கொரோனா பாதித்த பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு செய்தார்.
பட்டிவீரன்பட்டி அருகே, கொரோனா பாதித்த பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

பட்டிவீரன்பட்டி,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்கள் மூலமாக பட்டிவீரன்பட்டி அருகே ஒட்டுப்பட்டி, சிங்காரக்கோட்டை, நல்லாம்பிள்ளை, எம்.வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் 15 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையொட்டி கொரோனா பாதித்த கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுதவிர பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வீடுதோறும் வழங்கப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் கவிதா, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மருதமுத்து, ஜெயச்சந்திரன், சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிமலர்கண்ணன், சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com