

பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி ஊழியர்கள் அபராதம் வசூல் செய்தனர். ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், பஸ் போன்றவற்றில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பொதுமக்களிடம் தலா ரூ.200 வீதம் 15 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.