

திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து திருக்கடையூர் பகுதிகளில் சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் யாராவது முக கவசம் அணியாமல் செல்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.